ராஜபக்சர்களால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அழுத்தம் - திஸ்ஸ அத்தநாயக்க

sri lanka Tissa Attanayake democracy pressure
By Vanan Dec 13, 2021 09:03 PM GMT
Report

நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை நிறுத்துவதற்காக அல்லது அதனை ஒத்திவைக்கும் நோக்கில் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக விரோத செயல் எனவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் எந்தக் காரணத்திற்காக அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக இவ்வளவு காலமும் கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஒத்திவைக்கும் நோக்குடனேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகளை குறிப்பி அரசியல் அமைப்புச் சபையின் செயற்பாடுகள் இதன் ஊடாக பாதிப்படையும். அதன் பின்னர் என்ன நடக்கும்? அனைத்து குழுக்களுக்கும் மீள உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயற்பாடுகளை மீள புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இதன் ஊடாக தாமதம் ஏற்படும்.

கணக்காய்வு குழு மற்றும் கோப் குழு என்பன கடந்த காலங்களில் மிக முக்கிய விடயங்களை செயற்படுத்தியுள்ளன. குறிப்பாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் வெளிக்கொண்டுவரப்பட்டன.

இவ்வாறான சூழலில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த விடமானது அரசாங்கத்திற்கு ஏதேனும் பாதிப்பினை ஏற்படுத்தியதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

விசேட காரணம் ஒன்று காணப்படுமாயின் அது தொடர்பில் அரச தலைவர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனைவிட சபைக்குள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் மற்றும் செயற்குழுக்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் விடயங்களை நிறுத்துவதற்காக அல்லது ஒத்திவைக்கும் நோக்கிலுமே சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.

இது ஜனநாயக விரோத செயல். யாப்பில் அவருக்கு அதிகாரம் காணப்படுகிறது என்றாலும், இவ்வாறான நிலைமையில் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்ததன் ஊடாக ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015