வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!
பேருவளை மக்கொன-ஹல்கந்தவில வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை (14) இடம்பெற்றுள்ளது.
பேருவளை மக்கொன-ஹல்கந்தவில வீதியின் வெல்ல சந்தி பகுதியில் மக்கொனவிலிருந்து ஹல்கந்தவில நோக்கி பயணித்த உந்துருளியில் மோதி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் ஹல்கந்தவில அணைக்கட்டு சந்தியில் வசிக்கும் அனகியத்தயியகே நந்தாவதி (வயது 70) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் அருகில் உள்ள சந்தைக்கு வந்து வீதியைக் கடக்கும்போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பயாகல காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
விபத்து சம்பவம் தொடர்பில் உந்துருளியை ஓட்டிச் சென்ற ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் பயாகல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய உந்துருளி சாரதி இன்று (14) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பயாகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
