40 நாடுகளுக்கு இலவச விசா: அரசாங்கத்தின் முக்கிய முடிவு
மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாலைத்தீவு விஜயம்
கொழும்பில் இன்று (25) நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர், மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த திங்கட்கிழமை மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் அதன்போது, “Hotel Show Colombo 2025”கண்காட்சி இன்று காலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அந்த நிகழ்வானது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
