மனித புதைகுழியின் சூத்திரதாரிகளின் வாரிசுகள் நாடாளுமன்றில்!
மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில், 2012-2013 காலப்பகுதியில் கண்டறியப்பட்ட மனித புதைகுழி, ஏராளமான மனித எலும்புக்கூடுகளைக் கொண்டிருந்தது.
இந்த புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் சிலவற்றில் தோட்டாக்கள் மற்றும் உலோகப் பிணைப்புகள் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இது வன்முறை மரணங்களைக் குறிக்கிறது.
குறிப்பாக மாத்தளை புதைகுழி விசாரணைகளில் அரசின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன்படி விசாரணையை மேற்கொண்ட நீதவான் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டது, இலங்கை இராணுவத்தின் நலன்களைப் பாதுகாக்க அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த புதைகுழிகள் தொடர்பாக எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை, இது நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் போன்ற அமைப்புகள் இது போன்ற புதைகுழிகளை ஆய்வு செய்ய வேண்டுமென இன்றளவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இந்த பின்னணியில் மாத்தளை மனித புதைகுழியின் சூத்திரதாரிகளின் வாரிசுகள் நாடாளுமன்றில் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய எம்.பி ஒருவர் கூறிய விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில் இளம் வயதினரின் எச்சங்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் இதன் மர்மங்கள் வெளிவரவேண்டியதென்பதை தொடரும் காணொளி விவரிக்கிறது.
[DTERPBV ]
