பிறப்பு சான்றிதழில் ஏற்பட்ட புதிய மாற்றம்..!
                                    
                    Sri Lanka
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் வெளியிடப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
முதலாவது டிஜிட்டல் மயம்
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் சர்வதேச தரத்திற்கமைய இந்த தேசிய பிறப்புச் சான்றிதழில் வழங்கப்படும் இலக்கம் தேசிய அடையாள அட்டை இலக்கங்களாக மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        