விஸ்வருபமெடுக்கும் கச்சதீவு விவகாரம் : பா.ஜ.கவை போட்டுத் தாக்கும் ஸ்டாலின்
இந்திய மக்களவை தேர்தல் களத்தில் தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது கச்சதீவு விவகாரம்.
கச்சதீவை இலங்கைக்கு கண்ணை மூடிக்கொண்டு இந்திய காங்கிரஸ் கட்சி கொடுத்துவிட்டதாக பிரதமர் மோடி கடுமையாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மறுபுறம் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்பதே தமது இலக்கு என சூளுரைத்துள்ளார் பா.ஜக.வின் தமிழக தலைவர் அண்ணாமலை.
பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம்
இந்த நிலையில் கச்சதீவு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
திட்டமிட்டே தேர்தல் காலத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் இலாபம் பெற பாரதிய ஜனதா கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி முன்னிலையில்
கடந்த 2022ஆம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற விழா ஒன்றின் போது, பிரதமர் மோடி முன்னிலையில், கச்சதீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற வகையில் தான் கோரிக்கை விடுத்ததாகவும், 10 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |