இசை நிகழ்ச்சியை காண ஹெலியில் சென்ற பிலிப்பைன்ஸ் அதிபர் மீது கடும் குற்றச்சாட்டு
கடந்த வெள்ளிக்கிழமை (19) தனது மனைவியுடன் இசை நிகழ்ச்சியைக் காண ஹெலிகொப்டரில் சென்றமை தொடர்பாக பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் aka Bongbong குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ளார்.
அரசாங்க வளங்களை அதிபர் தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களே இதன் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல் குற்றச்சாட்டு
பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அதிபராக பதவியேற்ற பிறகு குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறை.
பிலிப்பைன்ஸ் அரங்கில் நடைபெற்ற 'கோல்ட்பிளே' இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியைக் காண அதிபரும் முதல் பெண்மணியும் ஹெலிகொப்டரில் சென்றனர்.
சன நெரிசல் காரணமாக
40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இசை நிகழ்ச்சியை காண வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக ஹெலிகொப்டர் மூலம் நிகழ்வு நடந்த இடத்திற்கு அதிபரை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் பாதுகாப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |