"உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்" - ஐ.பி.சி தமிழ் யாழ் கலையகத்தில் நடைபெறும் இரத்த தான முகாம்!
IBC Tamil
Jaffna
By Pakirathan
உலகத் தமிழர்களுக்கு ஓர் உறவுப்பாலமாய் பயணித்துக்கொண்டிருக்கும் ஐ.பி.சி தமிழ் ஊடகக் குழுமம் மற்றும் ஐ.பி.சி தமிழ் வானொலி தனது 26 ஆவது ஆண்டு நிறைவை 09 - 06 - 2023 அன்று கொண்டாடவுள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் ஐ.பி.சி தமிழ் ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் "உதிரம் கொடுத்து உயிர் காப்போம் வாரீர்" எனும் தொனிப்பொருளில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏராளமான உறவுகள் ஐ.பி.சி தமிழ் யாழ் கலையகத்திற்கு வருகை தந்து காலை 10 மணியில் இருந்து இரத்த தானத்தினை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இரத்த தானம் செய்ய விரும்பும் அனைத்து நல்லுள்ளங்களும் இன்றையதினம் ஐ.பி.சி தமிழ் யாழ் கலையகத்திற்கு வருகை தந்து இரத்த தானத்தினை செய்யலாம்.



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்