வெளிநாட்டிலிருந்து வந்த பெண் மாயம்! வீட்டில் இரத்த கறை - தீவிர விசாரணையில் கிளிநொச்சி காவல்துறை (காணொளி)
கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பெண் வசித்து வந்த கிளிநொச்சி - உதயநகர் - அம்பாள்குளம் பகுதியிலுள்ள வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது - 67) என்ற 5 பிள்ளைகளின் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பிரித்தானியாவில் வாழ்ந்த வந்த குறித்த பெண், தனது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.
இந்த பெண் வங்கிக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
சந்தேகத்தின்
பெயரில் அயலில் வாடகைக்கு குடியிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் சந்தேகத்திற்கு இடமான
தடயங்கள் இருப்பதாகவும் எனவே குறித்த மூதாட்டி கொலை
செய்யப்பட்டிருக்கலாம் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.