யாழில் அதிகரிக்கும் வன்முறை - மர்மமான முறையில் தீக்கிரையான படகு
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - வல்வெட்டித்துறை படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (01.11.2025) மதியம் 1:30 மணியளவில் வல்வெட்டித்துறை - பொலிகண்டி ஆலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவத்திற்கு காரணம் இது வரைக்கும் தெரியவரவில்லை.
மேலதிக விசாரணை
சம்பவம் தற்செயலாக ஏற்பட்டதா இல்லை யாரும் விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா என மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இதன்போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன என தெரியவருகிறது.
முதலாம் இணைப்பு
யாழ். நகர் பகுதியில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள் வெளியாகவில்லை. பொது இடத்தில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதால் மக்கள் அச்ச நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
