மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் உடல்
Ilayaraaja
Colombo
By Sumithiran
புற்று நோய் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மலர்சாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கொழும்பு லங்கா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது மலர்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை இந்தியாவிற்கு
அவரது உடல் நாளை வெள்ளிக்கிழமை காலை இந்தியாவிற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சகோதரர்கள் கொழும்பு விரைவு
இதேவேளை சகோதரர்களான யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் கொழும்பிற்கு வருகை தரவுள்ளனர். நாளை அதிகாலை 3 மணிக்கு இவர்கள் இருவரும் கொழும்பிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |