அதிகாலைவேளை மரத்தில் தொங்கிய நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
மரத்தில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் இன்று(21) அதிகாலை மீட்கப்பட்டதாக வட்டவளை காவல் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன கமகே தெரிவித்தார்.
வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட குயில்வத்த பகுதியைச் சேர்ந்த கண்ணன் மணிராணி என்ற 62 வயதுடைய பெண்ணின் சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பல்வேறு கோணங்களில் விசாரணை
தங்களது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் குறித்த பெண் தனது சேலையில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்ததாக தோட்டத் தொழிலாளர்கள் வட்டவளை காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், வட்டவளை காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிக்க, ஹட்டன் காவல்துறை புலனாய்வுக் குழுவின் உதவியுடன், பல பிரிவுகள் வழியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்