நீர்கொழும்பு சிறை பாதாள போர்! 25 திகில் பலிகள் - 5 அதிகாரிகள் அடித்துக் கொலை
நீர்கொழும்பு என்ற நகரத்தில் உள்ள சிறைவளாகம் ஒரு பகுதி என்ற வன்னிபோர் முனையா? என நினைக்கும் அளவுக்கு இன்று காலை முதல் சிறிலங்கா வான்படையின் பெல் உலங்குவானூர்திகள் வட்டமடித்தன ட்ரோன்கள் பறந்தன.
துருப்புகள் திமுதிமுவெனக் குதித்தன. அம்புலன்ஸ்கள் சைரன்களை அலற விட்டபடி ஓடின. சிறைவளாகத்துக்குள் படபடவென வெடியோசைகள் கேட்டன.
நீர்கொழும்பு சிறையில் இன்று இரண்டாவது நாளாகவும் போதை பாதள கிங்-பின்கள் தூண்டிய இந்த வன்முறைகள் பெரும் கலவரக்களமாக மாறி இந்தப் பதிவு பதியப்படும்போது ஐந்து சிறை அதிகாரிகளும் இருபது கைதிகளும் பலியாகி அதிகாரிகள் உட்பட 100 பேர் காயமடைந்துள்ளதான அதிர்ச்சிப் பட்டியலைத் தந்தது.
காயமடைந்த அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான கைதிகளில் சிலர், அதிகமானோர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதால் பலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சிறிலங்காவின் வெலிக்கடை சிறையில் 1983 இல் இதே ஜூலை மாதம் இடம்பெற்ற தமிழ் கைதிகள் மீதான பெரும் பச்சைக்குருதி படுகொலையின் பின்னால் சிறை அதிகாரிகளே இருந்த வரலாற்றின் பின்னணியில் இப்போது சிறை அதிகாரிகள் மாபியாக்களுடன் கூடிக் குலவும் சந்தர்ப்பங்களுடன் இந்த பெரும் வன்முறைகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த விடயங்களைத் தாங்கிவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |