மோதலால் அதிரும் நீர்கொழும்பு சிறைச்சாலை: கைதிகளின் கைகளில் சிக்கிய துப்பாக்கிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று காலை தொடக்கம் வெடித்துள்ள வன்முறையின்போது சிறைக் கைதிகளின் கைகளில் துப்பாக்கிகள் சிக்கியிருக்கலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நீர்கொழும்பு சிறைக்குள் நிலவும் மோசமான சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக இன்று காலை இலங்கை விமானப்படை ஒரு ஆளில்லா விமானத்தை அனுப்பியிருந்தது.
எனினும் அந்த ஆளில்லா விமானத்தைக் குறிவைத்து சிறைக்குள்ளிருந்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானம்
அதன் காரணமாக ஆளில்லா விமானத்தைத் திருப்பியழைக்க விமானப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக சிறைக் கைதிகளின் கைகளில் சிறைச்சாலைப் பாதுகாப்பிற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த துப்பாக்கிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
அவ்வாறான நிலைமையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் இன்னும் தீவிரம் பெறக் கூடும் என்ற அச்சம் காரணமாக சிறைச்சாலையைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |