சர்வதேச சந்தையில் சடுதியாக குறைந்த தங்க - வெள்ளி விலை!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (06-07-2026) குறைவடைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,163.65 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 61.82 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
உள்நாட்டு சந்தை
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்தது.

இந்தநிலையில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவு இலங்கை சந்தையிலும் பிரதிபலிக்கக்கூடும் என சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இலங்கையின் உள்நாட்டு தங்க விலையில் டொலருக்கு எதிரான ரூபாயின் மாற்று விகிதம், இறக்குமதி செலவுகள் மற்றும் உள்ளூர் சந்தைத் தேவை உள்ளிட்ட காரணிகளும் தாக்கம் செலுத்தும் என்பதால் இறுதி விலை நிலவரம் அதனைப் பொறுத்தே அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |