ஹமாஸால் கடத்தப்பட்ட ஜேர்மன் பெண்ணின் இறப்பை உறுதி செய்தது இஸ்ரேல்
இஸ்ரேலில் நடந்த இசை விழாவில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் இஸ்ரேலிய-ஜெர்மன் பெண்ணான ஷானி லூக்கின் தாய், தனது மகள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும்,ஷானி லூக்கின் மரணத்தை கேட்டு அவரது சகோதரி வருத்தமாக இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் 23 வயதான ஷானி லூக் என்ற ஜெர்மன் பெண் பிணை கைதியாக பிடிக்கப்பட்டார் .
பிணைக்கைதியாக
பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட பெண்ணை நிர்வாணமாக வாகனமொன்றில் ஏற்றி கொண்டு செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது .
இதன் பின்னர் ஷானி லூக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான போதும் இஸ்ரேல் அதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் ஷானி லூக் கிரெடிட் கார்ட் பயன்படுத்தப்படுவதாக குறித்த வங்கி குறிப்பிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, அவரது தாயார் ஷானி லூக் உயிருடன் இருப்பதாக நம்புகின்றேன் என தெரிவித்திருந்தார்.
The mother of Shani Louk, the woman whose body was seen on video in the back of a pick-up truck driven by Palestinian terrorists to Gaza, released a statement earlier today.
— Visegrád 24 (@visegrad24) October 8, 2023
She confirmed she had seen her daughter on the video & asked the public for help with more information pic.twitter.com/LDcPsjGHP8
பச்சை குத்தியுள்ள அடையாளம்
மேலும் காசா பகுதியில் இருக்கும் குடும்ப நண்பர் ஒருவர் ஷானி லூக் ஹமாஸ் மருத்துவமனையில் இருப்பதாகவும் அவரை மீட்க ஜேர்மன் அரசாங்கத்தை விரைவாக செயல்படுமாறு கூறியிருந்தார் எனவும் ஷானி லூக்கின் தாய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை இஸ்ரேலிய அரசாங்கமும் அவரது தாயாரும் உறுதி செய்துள்ளனர்.
அவரது உடலில் பச்சை குத்தியுள்ள அடையாளங்களை வைத்து அவரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.