விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sathangani
காலி, ரத்கம - மலிதுவ பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் இருந்து ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
அத்துடன் அவருக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து ரத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி