யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலம் அடக்கம்!
யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலமானது இன்றையதினம்(22) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது ,பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகள் மற்றும் மகளின் கணவரால் படுகொலை செய்யப்பட்டு தனங்களப்பு பகுதியில் வீசப்பட்ட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைச் சந்தேக நபர்கள் திருகோணமலையில் கைது
பின்னர் கொலை சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகி இருந்தனர். அதன்பின்னர் விரிவுரையாளரின் மகன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், சடலத்தையும் மீட்டனர்.

இந்நிலையில் குறித்த விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் சடலம் கோம்பயன்மணல் மயானத்தில் புதைக்கப்பட்டது
சுமந்திரன் விதித்த தடை
இந்த வழக்கில் விரிவுரையாளரின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, தாயின் இறுதிச் சடங்கில், மயானத்தில் பங்குகொள்ள மகளுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை முன்வைத்த நிலையில் மன்று அதற்கு அனுமதி வழங்கியது.

கோம்பயன்மணல் மயானத்திற்கு கொலை சந்தேகநபரான, விரிவுரையாளரின் மகள்காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மயானத்தில் எந்தவிதமான காட்சிகளையும் பதிவு செய்ய வேண்டாம் எனவும், அப்படி பதிவு செய்தால் கைது செய்யவேண்டி ஏற்படும் எனவும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை வெளியே நிற்குமாறும் கூறினார். இருப்பினும் ஊடகவியலாளர்கள் குறித்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். சந்தேகநபரை காவல்துறையினர் அழைத்து சென்ற பின்னர், செய்தி சேகரிப்புக்காக இனி படங்கள், காணொளிகள் பதிவு செய்யலாமா என்று ஊடகவியலாளர்கள் கேட்ட நிலையில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அதற்கு பின்னரும் பதிவு செய்ய வேண்டாம் என மறுப்பு தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு தெரிவிக்காத காவல்துறை
இருப்பினும் காவல்துறை தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை, கொலைச் சந்தேக நபர்களான மகள் மற்றும் மருமகன் ஆகியோரை யாழ்.பதில் நீதவான் வாசல்தலத்தில் இன்று(22) முற்படுத்தப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டார்.
செய்திகள் -கஜிந்தன்,பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |