வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் : காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை
வவுனியாவில் (Vavuniya) தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு நெளுக்குளம் காவல்நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா - இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் - நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில் இருந்து கடந்த 1ஆம் திகதி சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சடலம் 40 வயதிற்கு மேற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மரணமடைந்து 10 - 15 நாட்களுக்கு பின்னரே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் உள்ளவர்களிடம் அதிகாரங்களை ஒப்படைத்தால் அதிகாரப்பகிர்வு நிச்சயம் : சுட்டிக்காட்டும் சுமந்திரன்
காவல்துறை கோரிக்கை
மீட்கப்பட்ட சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் சடலத்தை பற்றிய மேலதிக அடையாளங்களை பெற முடியவில்லை . அத்துடன் நீல நிற கோடு போட்ட சட்டை ஒன்றும் அவரது சடலத்தில் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சடலம் வவுனியா வைத்தியசாலையில் உள்ள பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோருவதுடன், அவ்வாறு இல்லாவிடின் அரச செலவில் குறித்த சடலத்தை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதை கிட்டிய நபர்கள் எங்காவது காணாமல் போயிருந்தால் நெளுக்குளம் காவல் நிலையத்தின் 0718592778 அல்லது 0242054286 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் நெளுக்குளம் காவல்நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
