நாட்டை வந்தடைந்த வாகனங்கள் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கையில் (Jaffna) கடந்த சில வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டை வந்தடைந்துள்ளது.
அந்தவகையில், பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர் துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.
மற்றுமொரு வாகனக் கப்பல்
ஜப்பானின் (Japan) டொயோட்டா லேண்ட் க்ரூஸர், பிராடோ, BMW, மெர்சிடிஸ் பென்ஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசெல், டைஹாட்சு மற்றும் சுசுகி வேகன் ஆர் போன்ற பிரபலமான வாகனங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.
இதேவேளை, மற்றுமொரு வாகனக் கப்பல் மே மாத ஆரம்பத்தில் துறைமுகத்துக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 3500 வாகனங்கள் எடுத்து வரப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் கருணா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தடை : அடுத்து சிக்கவுள்ள முக்கிய புள்ளிகள்
வாகனத்தின் விலை அதிகரிக்கும்
இவ்வாறான நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்த வரி, டொலர், பவுண்ட் போன்ற முக்கிய நாணயங்களின் பெறுமதியின் அதிகரிப்பு இலங்கையின் வாகன இறக்குமதியை கடுமையாக பாதித்துள்ளது.
அத்துடன் யென் பெறுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் அரோஷா ரோட்ரிகோ குறித்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
