உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் ரஷ்யா தொடர்பில் எடுத்த அதிரடி முடிவு
russia
us
suspends
bpeing
By Sumithiran
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த தங்கள் தொழில் கூட்டாளிகளுடனான உறவை துண்டித்துக்கொண்டது.
மொஸ்கோவில் தங்கள் நிறுவனத்தின் முக்கிய செயற்பாடுகளை நிறுத்துவதாக, அந்நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப உதவி, பராமரிப்பு, விமான பாகங்கள் ஆகியவற்றை போயிங் நிறுவனம் இனி வழங்காது.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள தங்கள் அலுவலகத்தை திங்கள்கிழமை அந்நிறுவனம் மூடியது. மேலும், மொஸ்கோவில் விமான ஓட்டுநர் பயிற்சிகளையும் நிறுத்தியது.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “அந்த பிராந்தியத்தில் உள்ள தங்கள் குழுவினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் கவனம் செலுத்திவருகிறோம்” என தெரிவித்தார்.
