சோமாலியாவில் குண்டுத் தாக்குதல் : 18 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Africa
Somalia
Bomb Blast
By Sathangani
ஆபிரிக்காவின் சோமாலியாவில் நேற்று (23) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில்18 பேர் உயிரிழந்ததாக பிராந்திய உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவின் பெலிட்வினி நகரில் வாகனம் ஒன்று வெடிமருந்துகளை நிரப்பி கொண்டு சென்றபோது அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்ததும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதன்போது 18பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் 5 பேர் காவல்துறையினர் எனத் தெரியவந்துள்ளது.
தீவிர விசாரணை
மேலும் இந்த சம்பவத்தில் 40இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்