தமிழரசுக்கட்சிக்குள் தனிநபரின் உச்சக்கட்ட அடாவடி: அடுத்தடுத்த பதவி விலகல் அறிவிப்பு
அண்மையக்காலமாக தமிழரசுக்கட்சிகளின் முக்கிய அரசியல் தலைமைகள் சிலர் அடுத்தடுத்து பதவி விலகல் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் வெளியில் தெரியப்படுத்தப்படாமல் இரகசியமாக பரதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில், வன்னியில் மூன்று தாசாப்தங்களாக இலங்கை தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை மேலோங்கி நிறுத்தி வைத்திருந்த சார்ல்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan), திட்டமிட்ட ரீதியில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் (M. A. Sumanthiran) தமாக அரசியல் தலையீடுகளில் இருந்து வெளியேறி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் சாதாரண பதவிகளுக்கு தள்ளப்பட்டார்.
இதையடுத்து, சுமந்திரனுக்கு ஆதராவாகவும் அவருக்கு விசுவாசமாகவும் இருக்கக்கூடிய துரைராசா ரவிகரன் (T. Raviharan) கட்சிக்குள் இணைக்கப்பட்டு சார்ல்ஸ் நிர்மலநாதன் பின் தள்ளப்பட்டு அவர் முன்னிலை வகிக்கும் ஒரு சூழல் உருவானது.
பின்பு காலம் கடக்க துரைராசா ரவிகரனும் தொய்வடைய தாமாக முன்வந்து அரசியல் தலையீட்டிலிருந்து விலகிக்கொள்ள, சிவமோகனை (S. Sivamohan) கட்சிக்குள் நகர்த்த பல நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அத்தோடு, இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் சாள்ஸ் மற்றும் பொருளாளர் பரஞ்சோதி ஆகிய இருவருடைய கடிதங்கள் எமக்கு கிடைக்க பெற்றுள்ளது எனவும் ஆனால் குறித்த கடிதத்தை நாங்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தொடர் மோதலினால் தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சிக்குள் இருந்து அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக விலகி, மாறி மாறி பதவிலகல்களை அறிவிப்பது கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவ்வாறான தொடர் பதவி விலகல்களின் காரணம், கட்சிக்குள் தொடர் மோதல்களின் பின்னணி, தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை, தமிழ் மக்களுக்கு கட்சி மீதான நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,

தந்தை செல்வா சிலை திறப்பு: தமிழரசுக்கட்சிக்கு இடையில் வெடித்த முரண்பாடு-பதவி விலகிய முக்கிய உறுப்பினர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
