தந்தை செல்வா சிலை திறப்பு: தமிழரசுக்கட்சிக்கு இடையில் வெடித்த முரண்பாடு-பதவி விலகிய முக்கிய உறுப்பினர்

Sri Lankan Tamils Mannar ITAK Current Political Scenario
By Shalini Balachandran Jul 03, 2025 04:54 AM GMT
Report

மன்னாரில் (Mannar) இடம்பெற்ற தந்தை செல்வாவின் சிலை திறப்பு விழாவில் தமிழரசுக் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடு வெடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த சிலையை புனர் நிர்மானம் செய்யும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்

திறக்க நடவடிக்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் புனர் நிர்மாண பணிகள் இடம் பெற்று வந்த நிலையில் கடந்த முதலாம் திகதி தந்தை செல்வாவின் சிலை மீண்டும் திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தந்தை செல்வா சிலை திறப்பு: தமிழரசுக்கட்சிக்கு இடையில் வெடித்த முரண்பாடு-பதவி விலகிய முக்கிய உறுப்பினர் | Father Selva Statue Rebuilt Tna Dispute In Mannar

இந்தநிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மத தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கட்சியின் உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மத தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஊடகவியலாளரை மிரட்டி சரமாரியாக தாக்கி உயிர் அச்சுறுத்தல்: அரசியல் கும்பலின் வெறிச்செயல்

ஊடகவியலாளரை மிரட்டி சரமாரியாக தாக்கி உயிர் அச்சுறுத்தல்: அரசியல் கும்பலின் வெறிச்செயல்

கட்சி உறுப்பினர்

உருவச் சிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் நகர கிளை தலைவராக உள்ள நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் மாலை அணிவிக்க வேண்டிய தருணத்தில் , நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மலர் மாலை அணிவித்து உள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை செல்வா சிலை திறப்பு: தமிழரசுக்கட்சிக்கு இடையில் வெடித்த முரண்பாடு-பதவி விலகிய முக்கிய உறுப்பினர் | Father Selva Statue Rebuilt Tna Dispute In Mannar

இதனால் குறித்த நிகழ்வின் இறுதியில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு எதிராக கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடும் தொனியில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம் - குழந்தைகளின் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து மீட்பு

செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம் - குழந்தைகளின் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து மீட்பு

இருவருடைய கடிதங்கள் 

அத்தோடு, இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தநிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடு காரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா சிலை திறப்பு: தமிழரசுக்கட்சிக்கு இடையில் வெடித்த முரண்பாடு-பதவி விலகிய முக்கிய உறுப்பினர் | Father Selva Statue Rebuilt Tna Dispute In Mannar

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர் சாள்ஸ் மற்றும் பொருளாளர் பரஞ்சோதி ஆகிய இருவருடைய கடிதங்கள் எமக்கு கிடைக்க பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் குறித்த கடிதத்தை நாங்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சி.வி.கே.சிவஞானம் அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026