கொழும்பில் பல இடங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் - பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பின் சில பகுதிகளில் இன்று மாலை பீதியை ஏற்படுத்திய சமுக ஊடகங்கள் மூலம் அனுப்பப்பட்ட போலியான அச்சுறுத்தல் எச்சரிக்கை குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இது தொடர்பில் கூறுகையில், இந்த போலி பதிவுகள் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டது.
"கொழும்பில் உள்ள இரண்டு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மிரிஹானா, நுகேகொட, கல்கிஸை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாகக் கூறப்படும் பதிவுகள் முற்றிலும் பொய்யானவை" என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று வெளியிட்ட தகவலில், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு இடுகை மீண்டும் திருத்தப்பட்டு தற்போது பரப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.