இந்தியாவில் அச்சுறுத்தலுக்குள்ளாகும் விமான பயணங்கள்...! 50 வெடிகுண்டு அச்சுறுத்தல்
புதிய இணைப்பு
இந்தியாவில் (India) இன்று (22) காலை முதல் இரவு வரை 50க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு அச்சுறுத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் மோசமாகி அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற அச்சுறுத்தல்களை அனுப்புபவர்களை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஏர் இந்தியா (Air India) விமானங்களுக்கு காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த குர்பத்வந்த் பன்னுன் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
நவம்பர் 1ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என இன்று (21.10.2024) குர்பத்வந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஏர் இந்தியா உட்பட பல்வேறு விமானங்களுக்கு அடுத்தடுத்து மிரட்டல் வரும் நிலையில், இந்த மிரட்டல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சீக்கிய இனப்படுகொலை
ஏர் இந்தியா உட்பட பல விமானங்களுக்குக் கடந்த சில நாட்களாக வரிசையாக மிரட்டல் வருகிறது. இதனால் அவசர அவசரமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், அனைத்து மிரட்டல்களுமே போலியாகவே உள்ளது
இந்நிலையில், சீக்கிய இனப்படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு ஆண்டை முன்னிட்டு ஏர் இந்தியா விமானங்கள் தாக்கப்படலாம் என்றும் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த குர்பத்வந்த் பன்னுன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் (Canada) இரட்டைக்குடியுரிமை வைத்துள்ள சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் நிறுவனரான பன்னுன் கடந்த ஆண்டும் இதே நேரத்தில் இப்படியான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |