இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு!
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Shalini Balachandran
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கட் போட்டிகள்
சம்பவத்தில் சிக்கி 21 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இஸ்லாமாபாத்துக்கு அருகில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
கிரிக்கெட் வீரர்கள்
மேலும், முன்னதாக மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த முத்தரப்பு தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியிருந்தது.

மேலும், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் குண்டுவெடிப்பு நடந்த மறுதினமான இன்று இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |