பத்து வருடங்களுக்கு பின்னர் சுதந்திரக்கட்சி தலைமையகம் சென்ற நாமல்
SLFP
SLPP
Namal Rajapaksa
Nimal Siripala De Silva
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (10) சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணி தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே இந்த வருகை இடம்பெற்றுள்ளதாக, நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்
டார்லி வீதியில் உள்ள சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அதன் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் மற்றும் சிறி லங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்