ஜனாதிபதி அநுரவின் பட்ஜெட் உரை : கிண்டலடிக்கும் நாமல்
நான்கரை மணி நேர பட்ஜெட் உரையை ஜனாதிபதி சமர்ப்பித்த போதிலும், அடுத்த ஆண்டும் அதே உரையைக் கேட்க ஆவலுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
நாடாளுமனறில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
அதிகாரபூர்வ வாகனங்கள் தேவையில்லை
என்னுடையதும் எனது சக எம்.பி.க்களுக்குமென ஒதுக்கப்பட்ட அதிகாரபூர்வ கப் ரக வாகனங்கள் தேவையில்லை என்றும், மூன்று வாகனங்களையும் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான ஆதரவின் அடையாளமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நிற்கும்
அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நிற்கும் என்று நாமல் மேலும் தெரிவித்தார்.

நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பேரணி குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளிடையேயும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் கட்சிகளும் அதில் பங்கேற்கும் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |