ஹோர்முஸ் நீரிணை இன்னும் எங்கள் பிடியில்...! ட்ரம்பிற்குப் பதிலடி கொடுத்த ஈரான்
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கூற்றை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியின் கடல்வழிப் போக்குவரத்தை நிர்வகிக்கும் ஈரானிய அமைப்பான பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம் (Persian Gulf Strait Authority) இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.
குறித்த ஆணையத்தின் கருத்தின்படி, “ஹோர்முஸ் நீரிணையின் முடக்கம் நீக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறிவரும் கூற்றுகளும் சமூக வலைதளப் பதிவுகளும் எதார்த்த நிலையை மாற்றிவிட முடியாது.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து முடக்க நிலையிலேயே (Blocked) உள்ளது.
ஈரான் முன்வைத்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் எங்கள் கடற்படை முற்றுகையானது இரும்புச் சுவர் (Wall of Steel) போன்றது எனவும் ஈரானால் இனி எதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு இருதரப்பு மோதல்கள் மற்றும் பதற்றம் காரணமாக இந்த முக்கிய சர்வதேச எண்ணெய் வர்த்தக வழித்தடத்தில் பயணிக்கும் வணிகக் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |