பிழை திருத்தம் செய்யப்படாத புத்தகம் குறித்து விமர்சனம் : npp எம்.பி கவலை
பிழை திருத்தம் செய்யப்படாத ஒரு புத்தகம் குறித்து ஊடக விவாதங்களை நடத்துவது பலவீனமான விஷயம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று (08) ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு கூறினார்.இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கனி தரும் மரத்தின் மீது கற்கள் வீசப்படும் என்ற கதையை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதற்கு எதிராக ஒரு பாவப்பட்ட கும்பல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கும்பல்தான் தற்போதைய அரசாங்கத்திற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் எதிராக அவதூறு பரப்புகிறது.
தவறான விமர்சனம் வேண்டாம்
ஆனால் நீங்கள் சமூகத்திற்குள் சென்று தற்போதைய அரசாங்கத்தைப் பற்றி ஒரு கணக்கெடுப்பை நடத்தினால், மக்கள் தற்போதைய அரசாங்கத்துடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு 500% உறுதியாகத் தெரியும்.

பிழை திருத்தம் செய்யப்படாத ஒரு புத்தகம் குறித்து பலவீனமான மக்கள் ஊடக விவாதங்களை நடத்துகிறார்கள்.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 8 மணி நேரம் முன்