அமெரிக்காவின் வெனிசுவேலா மீதான ஆக்கிரமிப்பும் பின்புலமுள்ள உண்மைக்காரணமும்

Donald Trump United States of America Venezuela
By Sumithiran Jan 05, 2026 08:57 AM GMT
Report

அமெரிக்கா வெனிசுவேலாவை ஆக்கிரமிப்பதற்கான உண்மையான காரணம், போதைப்பொருள் அல்ல, தீவிரவாதம் அல்ல, ஜனநாயகம் அல்ல. 1974-ல் ஹென்றி கீசிங்கர் சவுதி அரேபியாவுடன் செய்த ஒரு உடன்பாடு தான் காரணம்.

இந்த உடன்பாடு, உண்மையிலேயே அமெரிக்க டொலர் இன்று வரை உயிர் பிழைத்திருப்பதற்கான காரணம்.

கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவை உலகின் முதன்மை பொருளாதார சக்தியாக வைத்திருப்பது பெட்ரோ-டொலர் மட்டுமே. அந்த அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதாக வெனிசுவேலா மிரட்டியது. உண்மையில் நடந்தது இதுதான்.

வெனிசுவேலாவிடம் 330 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இது உலகிலேயே அதிகம். சவுதி அரேபியாவைவிட அதிகம். உலக எண்ணெயின் சுமார் 20%. வெனிசுவேலா அந்த எண்ணெயை அமெரிக்க டொலரில் அல்ல, சீன யுவானில் விற்பனை செய்ய ஆரம்பித்தது.

2018இல், வெனிசுவேலா அமெரிக்க டொலரிலிருந்து விடுபடப் போகிறோம் என்று அறிவித்தது. அவர்கள் யுவான், யூரோ, ரூபிள் என- டொலரைத் தவிர எந்த நாணயத்தையும், எண்ணெய்க்கு ஏற்கத் தொடங்கினர்.

பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் சேர மனு கொடுத்தனர். உலகளாவிய வங்கிகளுக்கிடையேயான நிதி தொலைத்தொடர்பு சங்கம் (SWIFT) என்ற அமைப்பை முழுமையாகத் தவிர்க்கும் வகையில் சீனாவுடன் நேரடி கட்டண வழிகளை உருவாக்கினர்.

பல தசாப்தங்கள் டொலர் ஆதிக்கத்தை உடைக்கக் கூடிய அளவு எண்ணெய் அவர்களிடம் இருந்தது.

இது ஏன் முக்கியம்?

முழு அமெரிக்க நிதி அமைப்பும் ஒரே விடயத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அதுதான் பெட்ரோ-டொலர்.

1974இல், அமெரிக்க ஜனாதிபதி ஹென்றி கீசிங்கர் சவுதி அரேபியாவுடன் ஒரு உடன்பாடு செய்தார்: உலகளவில் விற்கப்படும் அனைத்து எண்ணெயும் அமெரிக்க டொலரில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், அதற்கு பதிலாக, அமெரிக்கா இராணுவ பாதுகாப்பு வழங்கும்.

இந்த ஒரே உடன்பாடு உலகம் முழுவதும் டொலருக்கு செயற்கை தேவையை உருவாக்கியது.

எண்ணெய் வாங்க ஒவ்வொரு நாட்டுக்கும் டொலர் தேவை. இதனால் தான், அமெரிக்கா வரம்பில்லாமல் பணம் அச்சிட முடிகிறது; மற்ற நாடுகள் அதற்காக உழைக்க வேண்டிய நிலை உருவாகிறது.

இது இராணுவத்திற்கு நிதியளிக்கிறது. நலத்திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. பெரும் கடன் செலவினங்களை ஈடுசெய்ய நிதியளிக்கிறது.

பெட்ரோ-டொலர் என்பது விமானம் தாங்கிக் கப்பல்களை விடவும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு முக்கியமானது.

இதனை சவால் செய்த தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்.

2000: சதாம் ஹுசேன், ஈராக் எண்ணெய், டொலருக்கு பதிலாக யூரோவில் விற்கப்படும் என அறிவித்தார்.

2003: ஈராக் மீது படையெடுப்பு. ஆட்சி மாற்றம். எண்ணெய் மீண்டும் டொலருக்கு மாறியது. சதாம் கொல்லப்பட்டார்.

WMD எனப்படும் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை — ஏனெனில் அவை இருந்ததே இல்லை.

2009: கடாபி, எண்ணெய் வர்த்தகத்திற்கு தங்க ஆதாரத்துடன் “தங்க தினார்” என்ற ஆபிரிக்க நாணயத்தை முன்மொழிந்தார்.

ஹிலாரி கிளிண்டனின் கசிந்த மின்னஞ்சல்கள், இதுவே தலையீட்டின் முக்கிய காரணம் என்று உறுதி செய்கின்றன.

“இந்த தங்கம், லிபிய தங்க தினாரை அடிப்படையாகக் கொண்டு பான்-ஆபிரிக்க நாணயத்தை உருவாக்குவதற்காக இருந்தது.” என அந்த மின்னஞ்சல் மேற்கோள் காட்டுகிறது.

2011: நேட்டோ லிபியா மீது குண்டுவீசியது. கடாபி கொடூரமாக கொல்லப்பட்டார். லிபியாவில் திறந்த அடிமை சந்தைகள் உருவானது.

“நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்தார்! என்று கிளிண்டன் ஒளிப்படக் கருவிக்கு முன் சிரித்தார். தங்க தினார் அவருடன் இறந்தது.

இப்போது மதுரோ. சதாம் மற்றும் கடாபியை ஒன்றாகச் சேர்த்ததைவிட, ஐந்து மடங்கு அதிக எண்ணெய். யுவானில் விற்பனை செய்யப்பட்ட எண்ணெய்.

டொலர் கட்டுப்பாட்டுக்கு வெளியே கட்டண அமைப்புகள். பிரிக்ஸ் உறுப்பினர் மனு. சீனா, ரஷ்யா, ஈரான் — என உலக டொலர் மதிப்பிழப்பை வழிநடத்தும் நாடுகளுடன் கூட்டணி. இது தற்செயலானது அல்ல.

பெட்ரோ-டொலரை சவால் செய்தால் — ஆட்சி மாற்றம். ஒவ்வொரு முறையும்.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் இரண்டு வாரங்களுக்கு முன் வெளிப்படையாகச் சொன்னார்: “அமெரிக்கர்களின் உழைப்பு, புத்திசாலித்தனம் தான் வெனிசுவேலாவின் எண்ணெய் தொழில்துறையை உருவாக்கியது. அதை அங்குள்ள ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்தனர். அமெரிக்க செல்வத்தின் மிகப் பெரிய திருட்டு.” அவர் மறைக்கவே இல்லை.

100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கின என்பதால், வெனிசுவேலா எண்ணெய் அமெரிக்காவுக்கே சொந்தம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த தர்க்கப்படி, வரலாற்றில் நடந்த ஒவ்வொரு தேசியமயமாக்கலும் “திருட்டு”.

ஆனால் இன்னும் ஆழமான பிரச்சினை ஒன்று உள்ளது: பெட்ரோ-டொலர் ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கிறது.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா எண்ணெயை ரூபிள் மற்றும் யுவானில் விற்கிறது.

சவுதி அரேபியா யுவான் தீர்வுகள் பற்றி திறந்தவெளியில் பேசுகிறது.

ஈரான் பல ஆண்டுகளாக டொலருக்கு வெளியே வர்த்தகம் செய்கிறது.

சீனா SWIFT-க்கு மாற்றாக CIPS அமைப்பை உருவாக்கியது-

185 நாடுகளில் 4,800 வங்கிகள். பிரிக்ஸ், டொலரைத் தவிர்க்கும் கட்டண அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

mBridge திட்டம் மத்திய வங்கிகளுக்கு உள்ளூர் நாணயங்களில் உடனடி தீர்வு வழங்குகிறது.

330 பில்லியன் பீப்பாய் எண்ணெயுடன் வெனிசுவேலா பிரிக்சில் சேர்ந்தால், இது எல்லாவற்றையும் மேலும் வேகப்படுத்தும். அதுதான் இந்த படையெடுப்பின் உண்மையான காரணம்.

போதைப்பொருட்கள் அல்ல — அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள கோகைனில் வெனிசுவேலாவின் பங்கு 1%-க்கும் குறைவு.

தீவிரவாதம் அல்ல — மதுரோ தீவிர அமைப்பை நடத்துகிறார் என்பதற்கான சான்று இல்லை.

ஜனநாயகம் அல்ல — அமெரிக்கா தேர்தலே இல்லாத சவுதி அரேபியாவை ஆதரிக்கிறது.

இது உலகம் உழைக்கும் போது, அமெரிக்கா பணம் அச்சிட அனுமதிக்கும் 50 ஆண்டு உடன்பாட்டைக் காப்பாற்றுவது பற்றியது. விளைவுகள் பயமுறுத்துவதாக இருக்கலாம்:

ரஷ்யா, சீனா, ஈரான் இதை “ஆயுத ஆக்கிரமிப்பு” என்று கண்டித்துள்ளன. சீனா வெனிசுவேலாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளர் — அவர்கள் பில்லியன்களை இழக்கிறார்கள்.

பிரிக்ஸ் நாடுகள், டொலருக்கு வெளியே வர்த்தகம் செய்ததற்காக ஒரு நாடு ஆக்கிரமிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு செய்தி: டொலரை சவால் செய்தால், நாங்கள் குண்டுவீசுவோம்.”

ஆனால் பிரச்சினை என்னவென்றால்… இந்த செய்தி டொலர் மதிப்பிழப்பை நிறுத்தாமல், வேகப்படுத்தலாம். ஏனெனில் இப்போது உலகின் தெற்கில் உள்ள நாடுகள், டொலர் ஆதிக்கத்தை சவால் செய்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொண்டுள்ளன.

அவர்களுக்கு பாதுகாப்பு தரும் ஒரே வழி – மேலும் வேகமாக டொலருக்கு எதிராக முன்னேறுவது மட்டுமே, நேரமும் சூழலும் கூட அசாதாரணமாக உள்ளது:

ஜனவரி 3, 2026: வெனிசுவேலா ஆக்கிரமிப்பு. மதுரோ கைது.

ஜனவரி 3, 1990: பனாமா ஆக்கிரமிப்பு. நோறியேகா கைது.

36 ஆண்டுகள் இடைவெளி. கிட்டத்தட்ட அதே நாள். அதே நடைமுறை. அதே “போதைப்பொருள் கடத்தல்” காரணம். அதே உண்மையான நோக்கம்:

மூலவளங்கள் மற்றும் வர்த்தக நடைமுறைகள் மீது கட்டுப்பாடு. வரலாறு திரும்பாது. அடுத்து என்ன நடக்கும்?

மார்-அ-லாகோவில் ட்ரம்பின் செய்தியாளர் சந்திப்பு கதையை அறிவிக்கும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுவேலாவுக்கு திரும்ப அணுகும். எதிர்க்கட்சி நிறுவப்படும். எண்ணெய் மீண்டும் டொலரில் ஓடும்.

வெனிசுவேலா — இன்னொரு ஈராக், இன்னொரு லிபியா.

ஆனால் யாரும் கேட்காத கேள்வி: நாளை தங்களின் நாணய ஆதிக்கத்துக்காக குண்டுவீச முடியாத நிலை உருவாகுமா?

சீனாவுக்கு பதிலடி கொடுக்கத் தேவையான பொருளாதார ஆற்றலை அமெரிக்கா பெற்றால்? BRICS உலக GDP-யின் 40%-ஐ கட்டுப்படுத்தி “இனி டொலர் இல்லை” என்ற நிலை வந்தால்...??

பெட்ரோ-டொலர் வன்முறையால் தான் காக்கப்படுகிறது என்பதை உலகம் உணர்ந்தால்?

அமெரிக்கா தனது திசையை தன் திட்டத்தை வெளிப்படுத்திவிட்டது. உலகம் அடிபணியுமா, இல்லையா — அதைச் சவால் விடுமா— என்பதே கேள்வி.

உங்கள் நாணயத்தை அனைவரையும் பயன்படுத்த வைக்க நீங்கள் நாடுகளை குண்டுவீச வேண்டியிருந்தால், அந்த நாணயம் ஏற்கனவே இறந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அறிவிப்பு மட்டுமே..

வெனிசூயேலா ஆரம்பம் அல்ல. அது ஒரு அவசரமான முடிவு.

நன்றி - Bupalan Chinappa

வழிமூலம் – முகநூல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, சென்னை, India

04 Jan, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

சுருவில், டோட்மண்ட், Germany, Kierspe, Germany, Hildesheim, Germany

30 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புதுக்குளம், பிரித்தானியா, United Kingdom, சின்னக்கடை

06 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

07 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016