58 ஆவது வயதில் எட்டாவது குழந்தைக்கு தந்தையானார் பொறிஸ் ஜோன்ஸன் -குவியும் மக்களின் வாழ்த்துக்கள்
பிரிட்டன் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எட்டாவது குழந்தை பிறந்ததை அடுத்து அந் நாட்டு மக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
58 வயதான பிரிட்டன் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் மனைவி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்த நிலையில் அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.
ஏற்கனவே ஏழு குழந்தைகள்
இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே பொறிஸ் ஜோன்சனுக்கு ஏழு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்த குழந்தை எட்டாவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
58 ஆவது வயதில் எட்டாவது குழந்தைக்கு தந்தை
58 ஆவது வயதில் எட்டாவது குழந்தைக்கு தந்தையான பொறிஸ் ஜோன்சனுக்கு அந்நாட்டு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரிட்டன் பிரதமராக பொறிஸ் ஜோன்சன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
