காசோலை மோசடி செய்வோருக்கு சிறை
வங்கிகளில் போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை விநியோகிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையிவ் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான சிறைத்தண்டனை வழங்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான சட்டத்திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
காசோலைக்குச் சமமான தொகை
போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குவோரும், மூடிய கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குவோரும் இந்த சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்கள்.
வங்கிகளுக்கு நிதிப்பாதுகாப்பை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திருத்தங்களின் கீழ், விதிக்கப்படும் அபராதம், வங்கியில் உரிய நிதியின்றி திரும்பிய காசோலைக்குச் சமமான தொகையாக இருக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காசோலையை வழங்கிய ஒருவர், காசோலையைப் பெற்றவரின் கோரிக்கையின் கீழ் 90 நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தாது போனால் இந்த திருத்தத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
