சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
Sri Lanka
Death
Srilankan Tamil News
By Sindu
ஹம்பேகமுவ காவல் பிரிவிற்குட்பட்ட லகினகல பகுதியில் காணியொன்றில் நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் காணியொன்றிற்குள் நேற்று (23) நுழைய முற்பட்டபோதே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கல்இராமன்கட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.
மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை
கைது
இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி