பெற்றோரின் கவனமின்மை காரணமாக ஏற்பட்ட விபரீதம்..!
பெற்றோரின் கவனமின்மை காரணமாக இரண்டு வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.
கதிர்காமம் பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்துள்ளது .
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை சுற்றுலா விடுதி உரிமையாளர்களின் மகன் என தெரிவருகிறது.
மரண விசாரணை
சிறுவன் இன்று மதியம் சுற்றுலா விடுதியின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர், சிறுவனை காணவில்லை என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பெறறோர் சிறுவனை தேடியப்போது சிறுவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர்.
சிறுவன் நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட போது உயிரிழந்தே காணப்பட்டதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய திஸ்ஸமஹாராம திடீர் மரண விசாரணை அதிகாரி, பெற்றோரின் கவனமின்மை காரணமாக ஏற்பட்ட மரணம் என கூறியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
