புல் வெட்டச் சென்ற சிறுவன் கெசல்கமுவ ஆற்றில் விழுந்து உயிரிழப்பு
Nuwara Eliya
Central Province
Death
By Sindu
பொகவந்தலாவை காவல் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஆற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் பொகவந்தலாவை , லின்போர்ட் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார்.
முதற்கட்ட விசாரணை
குறித்த சிறுவன் தனது தாத்தாவுடன் புல் வெட்டுவதற்காகச் சென்ற வேளையிலேயே எதிர்பாராதவிதமாகக் கெசல்கமுவ ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |