யானையின் தாக்குதலில் பறிபோன சிறுவனின் உயிர் : காலைவேளை துயரம்

Trincomalee Elephant
By Sumithiran May 24, 2025 04:29 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

தனது தந்தையை பேருந்தில் ஏற்றி விட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை(trincomale) மாவட்டத்தில் கோமரங்கடவல காவல்துறை பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் 03இல் கல்வி பயின்று வரும் குறித்த சிறுவன் தந்தை திருகோணமலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றிற்கு வேலைக்காக செல்வதற்கு  பேருந்தில் ஏற்றுவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

வயல்வெளியில் மறைந்திருந்த யானை

வீட்டிலிருந்து 100 மீட்டருக்கும் அப்பால் உள்ள வயல் பகுதியில் காலை 6 மணி அளவில் யானை மறைந்திருந்த நிலையில் தாக்குதல் நடாத்திய போது தந்தை தப்பி ஓடிச் சென்ற நிலையில் உயிர் தப்பியுள்ளார். இதேநேரம்  08 வயது மகன் யானையின் பிடியில் மாட்டியுள்ளார்.

யானையின் தாக்குதலில் பறிபோன சிறுவனின் உயிர் : காலைவேளை துயரம் | Boy Killed In Elephant Attack

இதனையடுத்து யானை சிறுவனை தூக்கி வீசி சிறுவனின் தலையை மிதித்து தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்த நிலையில் பாரிய சத்தத்துடன் யானை கத்தி சத்தமிட்டு சென்றதை அவதானித்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

யாழில் சர்ச்சையை கிளப்பிய உணவகம் : கண்டுகொள்ளாத யாழ்.மாநகர சபை - விடுக்கப்பட்ட கோரிக்கை

யாழில் சர்ச்சையை கிளப்பிய உணவகம் : கண்டுகொள்ளாத யாழ்.மாநகர சபை - விடுக்கப்பட்ட கோரிக்கை

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

இந்நிலையில் குறித்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது சிறுவன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்ததாகவும் இதனை அடுத்து கோமரங்கடவல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.

யானையின் தாக்குதலில் பறிபோன சிறுவனின் உயிர் : காலைவேளை துயரம் | Boy Killed In Elephant Attack

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கோமரங்கடவல -இந்திக்கட்டுவெவ அரோஷ தினால் நிம்சர ராஜபக்ச (08வயது) எனவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் யானையின் தாக்குதலினால் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொலைக்களமாக திகழும் இலங்கையின் இரண்டு மாகாணங்கள் : அதிர்ச்சி தரும் தகவல்

கொலைக்களமாக திகழும் இலங்கையின் இரண்டு மாகாணங்கள் : அதிர்ச்சி தரும் தகவல்

ஆனாலும் குறித்த யானையின் தாக்குதல் மற்றும் யானைகளின் தொல்லை அதிகரிப்பு தொடர்பில் கோமரங்கடவல பிரதேசத்துக்கு பொறுப்பான வன இலாகா திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கூட யானையின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் யானை மின்வேலிகளை உடைத்துக்கொண்டு கிராமத்துக்குள் வருவதாகவும் யானையை விரட்டும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் வன இலாகா அதிகாரிகளின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016