கொலைக்களமாக திகழும் இலங்கையின் இரண்டு மாகாணங்கள் : அதிர்ச்சி தரும் தகவல்
Sri Lanka
Gun Shooting
By Sumithiran
2022 முதல் இந்த ஆண்டு மார்ச் 31 வரையான காலப்பகுதியில் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் கொலைகள் அதிகளவில் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தக் காலகட்டத்தில், நாட்டில் 349 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 238 கொலைகள் அரங்கேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.
கொழும்பு மற்றும் காலியில் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள்
மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கொலைகளும் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலும், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்திலும் அடிக்கடி நடப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகளைக் கருத்தில் கொண்டு, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை மற்றும் அஹுங்கல்ல காவல் பிரிவுகளில் நிலைமை மோசமாக இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி