ஆட்டுக்கு இரை தேடச்சென்ற சிறுவன் குண்டு வெடிப்பில் பலி
killed
boy
muthur
bomb blast
By Vanan
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று(12) மாலை இடம்பெற்றுள்ளது.
ஆட்டுக்கு இரை (உணவு) வெட்டச் சென்ற, தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்