வவுனியாவில் நித்திரையில் இருந்த சிறுவனை காணவில்லை : தாய் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
Missing Persons
Vavuniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
வவுனியாவில் அதிகாலைவேளை நித்திரையில் இருந்து சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
நேற்று முன்தினம் (09) அதிகாலை 04.30 மணிக்கு வீட்டில் உறங்கிய மகனை காணாத நிலையில் அப்பகுதி முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்களால் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா பூவரசங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து தேடி வருகின்றனர்.
குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி இலக்கம் 0761698019 க்கு அல்லது சிறுவனின் மாமாவின் தொலைபேசி இலக்கம் 0774909955 அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்