காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் வைத்தியசாலையில்
கடவத்த - மகாகடே சந்தியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் (31) மகாகடே சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்தவர் 16 வயது சிறுவன் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தெரிய வருகையில்,
வலுக்கட்டாய நாடுகடத்தல் திட்டத்தில் திருச்சி சிறப்பு முகாம்: ஈழ குரல்களுக்கு செவிசாய்க்க தயங்கும் தமிழக அரசு
போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை
போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குழு ஒன்று, அங்கிருந்து சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், காவல்துறையின் உத்தரவை மீறி அந்த வாகனம் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முச்சக்கரவண்டியை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகில் இரண்டு முறை சுடப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |