அரச தலைவரின் செயலாளர் எடுத்துள்ள முக்கிய முடிவு! கோட்டாபயவின் நிலைப்பாடு என்ன?
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர (BP Jayasundera) இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை 'வார இறுதி நாளிதழ்' ஒன்றினை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பதவி விலகுவது தொடர்பில் அரச தலைவருக்கு இது தொடர்பில் நீண்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அரச தலைவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்மையில் அமைச்சர் சமல் ராஜபக்ச, அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பி.பீ.ஜயசுந்தரவிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போதைய நெருக்கடிக்கு அரச தலைவரின் செயலாளரே முக்கியமான காரணம் என பல அமைச்சர்களும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இதனால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றுள்ளது.
இதனையடுத்து பி.பீ.ஜயசுந்தர இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.