குறைவடைந்த அமேசான் காடழிப்பு வீதம்! பிரேசில் அரசின் நடவடிக்கை
அமேசான் காடழிப்பு வீதம் கடந்த ஆண்டில் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக விண்வெளி நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிக குறைந்தளவில் காடழிப்பு பதிவாகியது 2023 ஆம் ஆண்டில் என பிரேசிலின் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 50 வீதத்தால் காடழிப்பு நடவடிக்கைகள் குறைவடைந்திருந்தாலும், அழிக்கப்பட்ட பகுதிகள் நியுயார்க் நகரத்தை விட ஆறு மடங்கு பெரியதாக காணப்படுகிறது.
காடழிப்பு
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டாகும் போது காடழிப்பை முற்றாக ஒழிப்பதாக பிரேசிலின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உறுதியளித்திருந்தார்.
அத்துடன், அழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நாட்டுவதாகவும், காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முற்றாக ஒழிக்கப்படும் காடழிப்பு நடவடிக்கை
இதற்கமைய, காடழிப்பு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முற்றாக இல்லாது செய்வதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த 2023 ஆம் ஆண்டில் குறைந்தளவில் பதிவான அமேசான் காடழிப்பை சுட்டிக்காட்டலாம் என பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
O DESMATAMENTO CAIU 50% na Amazônia em 2023 de acordo com dados do Deter/INPE, que produz alertas diários de desmatamento para orientar a fiscalização.
— Ministério do Meio Ambiente e Mudança do Clima (@mmeioambiente) January 12, 2024
A área sob alertas foi de 5.153 km², contra 10.278 km² em 2022. pic.twitter.com/FheYxz1sZ0
விபத்துக்குள்ளான இலங்கையின் உலங்குவானூர்தி : பயங்கரவாதிகள் தொடர்பான வதந்தியை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு
அத்துடன், அமேசான் காடு அழிக்கப்படுவதையும் அதற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் பிரேசில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |