மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நெய்மர் - திடீரென விலகுவதாக அறிவிப்பு
பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கணுக்கால் அறுவை சிகிச்சைக்காக சீசனில் இருந்து விலகுவதாக பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணி (PSG) அறிவித்துள்ளது.
பிரான்சின் பாரிஸ் செயின்ட்- ஜேர்மைன் அணியில் விளையாடி வரும் நெய்மருக்கு, கடந்த மாதம் 20ஆம் திகதி காலில் சுளுக்கு ஏற்பட்டது.
இதனால் பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் மருத்துவ ஊழியர்கள், பெரிய ஆபத்தைத் தவிர்க்க தசைநார் பழுதுபார்க்கும் அறுவை சிகிச்சைக்கு நெய்மரை பரிந்துரைத்தனர்.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி

இந்நிலையில், நெய்மர் அறுவை சிகிச்சை காரணமாக இந்த சீசனை தவறவிடுவார் என PSG அறிவித்துள்ளது.
மேலும், ஆலோசிக்கப்பட்ட அனைத்து நிபுணர்களும் இந்த அவசியத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கிளப் கூறியுள்ளது.
லீக் 1 சீசனில் 13 கோல்கள் மற்றும் 11 அஸ்சிஸ்ட் செய்துள்ள நெய்மர் எஞ்சிய போட்டிகளை தவறவிடுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டில் பார்சிலோனாவில் சேர்ந்ததில் இருந்து கால், இடுப்பு, விலா எலும்பு மற்றும் கணுக்கால் காயங்கள் காரணமாக நெய்மர் பல போட்டிகளை தவறவிட்டார்.