தமிழர் பகுதியில் இலட்சக்கணக்கில் இலஞ்சம் கேட்ட காவல்துறை அதிகாரி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Magistrate Court
By Sumithiran
இலட்சக்கணக்கில் இலஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து வவுனியா(vavuniya) பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவரை எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று(27) உத்தரவிட்டார்.
இலஞ்சமாக பணமும்,காணியும் கேட்ட அதிகாரி
சந்தேகநபரான அனுர புஷ்பகுமார,என்ற காவல்துறை அதிகாரியே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
நிலத் தகராறைத் தீர்த்து, முறைப்பாட்டாளரின் சொத்தில் தொடர்புடைய பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கு ரூ. 500,000 மற்றும் 20 பேர்ச் நிலத்தை லஞ்சமாகக் கோரியதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி