சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை

Parliament of Sri Lanka Sri Lankan Peoples Bribery Commission Sri Lanka Jagath Wickramaratne
By Dhilak Feb 09, 2026 06:29 AM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த முறைப்பாடு தொடர்பில் லஞ்சம் ஊழல் ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சபாநாயகர் ஒருவருக்கு எதிராக லஞ்சம் ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்துவது இதுவே முதல் முறை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். நகரின் மையப் பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

யாழ். நகரின் மையப் பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்


எட்டு குற்றச்சாட்டுகள்

பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட செய்யப்பட்ட பிரதி செயலாளர் நாயகமும் நாடாளுமன்றப் பணியாளர்களின் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன சமீபத்தில் சபாநாயகருக்கு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார்.

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை | Bribery Comm Investigations Against Speaker

இந்த முறைப்பாட்டில் சபாநாயகருக்கு எதிராக ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான எட்டு குற்றச்சாட்டுகளை குலரத்ன முன்வைத்துள்ளார்.

அதன்படி, சமிந்த குலரத்ன தாக்கல் செய்த முறைப்பாட்டில், 

  1. இரட்டை எரிபொருள் கொடுப்பனவுகளை சட்டவிரோதமாகப் பெறுதல்.
  2. தனிப்பட்ட அல்லது முறைசாரா நோக்கங்களுக்காக அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்துதல்.
  3. நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் உபகரணங்களை தவறாகப் பயன்படுத்துதல்.
  4. முறையான கட்டணம் செலுத்தாமல் பாராளுமன்றத்திலிருந்து உணவு பெறுதல்.
  5. சட்டவிரோதமாக ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து அவருக்கு அரசாங்க நிதியில் இருந்து சம்பளம் மற்றும் வசதிகளை வழங்குதல்.
  6. இரண்டு அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை தவறாகப் பயன்படுத்துதல்.
  7. தகவல் அறியும் உரிமையின் (RTI) கீழ் செய்யப்படும் கோரிக்கைகளைத் தடுத்தல்.
  8. நாடாளுமன்ற ஊழியர்களின் நிர்வாக விவகாரங்களில் சட்டவிரோதமாக தலையிடுதல் ஆகிய எட்டு குற்றச்சாட்டுகள் அடங்கும்.

சபாநாயகருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர உட்பட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், முன்னாள் பிரதி செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற பணியாளர்கள் பிரிவின் தலைவருமான, சட்டத்தரணி சமிந்த குலரத்னவுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துங்கள் : அநுர அரசிடம் நாமல் இடித்துரைப்பு

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துங்கள் : அநுர அரசிடம் நாமல் இடித்துரைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020