எம்பிலிப்பிட்டியவில் பாலம் உடைந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு
Ratnapura
Sri Lanka
By Sathangani
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் ஹுலந்த ஓயா பாலம் சேமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போது குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
இதேவேளை பாலம் இடிந்ததால் பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாகவும் இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியத்த, தங்காலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்படி பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி