கெஹலியவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை!
                                    
                    Keheliya Rambukwella
                
                                                
                    Sri Lanka Cabinet
                
                        
        
            
                
                By Kathirpriya
            
            
                
                
            
        
    சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமால் சஞ்சீவவினாலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச நிதியை துஸ்பிரயோகம் செய்தமை உள்ளிட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் கெஹலிய வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் அமைச்சரவையில் நீடிக்கப்பட கூடாது என வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், கெஹலிய அமைச்சரவையில் தொடர்ந்தும் நீடித்தால் அது எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        