சுமந்திரன் - அநுர தேர்தலுக்கு பின்னரான டீல்...! ஜே.வி.பி ரில்வின் சில்வா விசனம்
இலங்கை தமிழரசுக் கட்சி உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பியின் (JVP) பிரதான செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.
நேற்று (4.11.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (MA Sumanthran) பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம்
இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே (sajith premadasa) ஆதரவளித்தனர். எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் ஆட்சியின் கீழ் சுமந்திரன் ( M. A. Sumanthiran) வெளிவிவகார அமைச்சாராக வரவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்ட பணம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டை முன்வைத்ததாக எழுந்த கூற்றுகளை மறுத்த டில்வின் சில்வா, அத்தகைய கூற்றுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் தான் முன்வைக்கப்பட்டதாக கூறினார்.
கொள்கலன்களில் அமெரிக்க டொலர்கள் இங்கு அச்சிடப்பட்டு உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவே தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |